முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் செயற்கை நீர்வீழ்ச்சி வழக்கு: இன்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      தமிழகம்
Madurai-High-court 2022-12-01

Source: provided

மதுரை: முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இயற்கை நீர்வீழ்ச்சிகள் இருக்கும் நிலையில் ஒருசில விடுதிகள் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாகியுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியார் விடுதிகளை உடனடியாக மூடுங்கள் என உத்தரவிட்டனர். மேலும் செயற்கை நீர்வீழ்ச்சி குறித்த அறிக்கைகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனையடுத்து, தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு உள்ள செயற்கையான நீர்வீழ்ச்சிகள் குறித்து ஆய்வு நடத்த மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், குற்றாலம் செயற்கை நீர்வீழ்ச்சி தொடர்பாக வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாரயண பிரசாத் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுலாத்துறை இயக்குனர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விரைவாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்ய தமிழக அரசிற்கு உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து