முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை விமர்சிப்பதில் காங்., கட்சியினரிடையே போட்டி: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      அரசியல்
Modi-1-2022-12-01

தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சியினர் தன்னை ‘ராவணன், ராட்சசன், ஹிட்லர்...’ என விமர்சித்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தன்னை விமர்சிப்பதில் காங்கிரஸ் கட்சியினரிடையே மிகப் பெரிய போட்டி நிலவுவதாகத் தெரிவித்தார்.

குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள கலோல் என்ற இடத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது: “நான் மல்லிகார்ஜூன கார்கேவை மதிக்கிறேன். அவருக்கு என்ன சொல்லப்பட்டதோ அதை சொல்லக்கூடியவர் அவர். அதனால்தான் அவர் என்னை ராவணனோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார். குஜராத் ராம பக்தர்களின் பூமி என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாது.

காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. இருந்திருந்தால் அவர்கள் இந்த அளவுக்குச் சென்றிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு குடும்பத்தின் மீதுதான் நம்பிக்கை. அந்தக் குடும்பத்தை மகிழ்விக்க அவர்கள் எதையும் செய்வார்கள். அந்தக் குடும்பம்தான் அவர்களுக்கு எல்லாம்; ஜனநாயகம் அல்ல. அவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்.

ஒரு நாயின் மரணத்தைப் போன்று எனது மரணம் இருக்கும் என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார். வேறொரு காங்கிரஸ் தலைவர் பேசும்போது, ஹிட்லருக்கு நேர்ந்த மரணத்தைப் போன்று எனக்கு மரணம் ஏற்படும் என சாபமிட்டார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மோடியை நானே கொலை செய்வேன் என ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார். சிலர் என்னை ராவணன் என்கிறார்கள்; ராட்சசன் என்கிறார்கள். சிலர் என்னை கரப்பான்பூச்சி என்றும் குறிப்பிடுகிறார்கள். என்னை யார் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்பதில் காங்கிரஸ் கட்சியினரிடையே மிகப் பெரிய போட்டியே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து