முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக 2 நாள் பயணமாக இன்று திருப்பதி வருகிறார் முர்மு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      இந்தியா
Draupadi-Murmu 2022 12 03

ஜனாதிபதியாக பதவியேற்று முதல்முறையாக திரவுபதி முர்மு 2 நாட்கள் திருப்பதிக்கு வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

ஜனாதிபதியாக பதவியேற்று திருப்பதி மாவட்டத்துக்கு முதல் முறையாக திரவுபதிமுர்மு இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) என 2 நாட்கள் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருப்பதிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

இது குறித்து மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி கூறுகையில், 

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஜனாதிபதி விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8:40 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைகிறார். இரவு 9.25 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருமலையை அடைகிறார். 

திருமலையில் தங்கி ஓய்வெடுத்ததும் நாளை (திங்கட்கிழமை) காலை 9.25 மணிக்கு வராஹ சுவாமி கோவில், வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை அடைகிறார். திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து