முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட் கிளையில் நாளை முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றம்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      தமிழகம்
madurai--high-court2022-08--11

Source: provided

மதுரை : ஐகோர்ட் மதுரை கிளையில் நாளை 5-ம் தேதி முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட உள்ளனர். 

ஐகோர்ட் மதுரை கிளையில் 3 மாதத்திற்கு ஒரு முறை விசாரணை நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, நாளை 5-ம் தேதி முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றப்பட உள்ளனர். அதன்படி பொது நல வழக்குகள், 2022-ம் ஆண்டு முதலாக ரிட் அப்பீல் மனுக்கள், குற்றவியல் அவமதிப்பு மனுக்களை நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், ஆர். விஜயகுமார் ஆகியோர் விசாரிப்பர். 

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வில், ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் அப்பீல் மனுக்கள், 2021ம் ஆண்டு வரையிலான ரிட் அப்பீல் மனுக்கள் விசாரிக்கப்படும்.  நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கனிமவளம், நில எடுப்பு, தியாகிகள் பென்சன் தொடர்பான மனுக்களை விசாரிப்பார். நீதிபதி எம்.தண்டபானி, தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான மனுக்களை விசாரிப்பார். நீதிபதி பி.டி. ஆதிகேசவலு, சுங்கம் மற்றும் கலால் வரி, மோட்டார் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வரி தொடர்பான மனுக்களை விசாரிப்பார்.

நீதிபதி ஆர்.தாரணி, 2020-ம் ஆண்டு வரையிலான சிவில் துணை மனுக்கள் மற்றும் சிவில் துணை இரண்டாம் அப்பீல் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி பி.புகழேந்தி, 2017-ம் ஆண்டு முதலான இரண்டாம் அப்பீல், சிவில் சீராய்வு மனுக்கள், கம்பெனி அப்பீல் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி ஜி.இளங்கோவன், சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்பு தொடர்பான மனுக்களையும், நீதிபதி கே.முரளிசங்கர் போலீசாருக்கு உத்தரவிட கோரும் மனுக்களையும் விசாரிப்பர்.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 2019-ம் ஆண்டு வரையிலான தொழிலாளர் மற்றும் பணியாளர் தொடர்பான மனுக்களையும், நீதிபதி என்.மாலா, முதல் அப்பீல், 2021-ம் ஆண்டு முதலான சிவில் துணை அப்பீல் மற்றும் சிவில் துணை இரண்டாம் அப்பீல் மனுக்களையும், நீதிபதி கே.குமரேஷ்பாபு, 2018-ம் ஆண்டு வரையிலான கனிமவளம், நில எடுப்பு, தியாகிகள் பென்சன் உள்ளிட்ட மனுக்களை விசாரிப்பார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து