முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ஜெயலலிதா நினைவு தினம்: வேதாரண்யத்தில் திதி கொடுத்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
OS-Manian 2022 12 04

Source: provided

நாகை ; ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திதி கொடுத்தார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது 6-ம் ஆண்டு நினைவு தினம் (இன்று) திங்கள்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திதி கொடுத்தார்.

முன்னதாக கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதா உருவப் படத்தை வைத்து அவர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அரிசி, காய்கறிகள், பிண்டம் உள்ளிட்டவற்றை வைத்து திதி கொடுத்து கடலில் விட்டார். இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து