முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 9 மாதங்களில் திருப்பதி கோயிலில் ரூ.1,161 கோடி காணிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      ஆன்மிகம்
thirupathi-2022 11 23

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமைலையான் கோயிலில் கடந்த 9 மாதங்களில் ரூ.1,161 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. இதுவரை வங்கியில் ரூ.15,938 கோடி ரொக்கம், 10,258 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் நகை, பணம் மற்றும் பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதன்படி தினசரி சுமார் ரூ.2.50 கோடி முதல் ரூ.5 கோடிக்கு மேலாக காணிக்கை கிடைக்கிறது.

இதனை தினமும் இரவுதோறும் எண்ணப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் வரை (9 மாதங்களில்) ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் காணிக்கை கிடைத்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ரூ.127.30 கோடி வருவாய் கிடைத்தது. இதன்மூலம் கடந்த 9 மாதங்களில் மொத்தம் ரூ.1,161.74 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. இதனால், இந்த நிதியாண்டில் உண்டியல் வருவாய் ரூ.1,600 கோடியை தாண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கருதுகின்றனர். கடந்த 9 மாதங்களில் அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் ரூ.139.35 கோடி கிடைத்தது. தினமும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவதாலும், நாளொன்றுக்கு ரூ.4 கோடி வருமானம் கிடைக்கிறது.

இதுவரை 2019-20ம் நிதியாண்டுக்கான அதிகபட்ச உண்டியல் வருவாய் ரூ.1,313 கோடியாகும். குறிப்பாக வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பதால் அந்த நாட்களில் காணிக்கை தொகை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு 1,000 கோடி கிடைப்பதால் தற்போது வரை தேவஸ்தானத்தின் நிலையான வைப்புத்தொகை (பிக்சட் டெபாசிட்) ரூ.15,938 கோடியாகவும், தங்கம் கையிருப்பு 10,258 கிலோவையும் தாண்டியுள்ளது. கடந்த 1950ம் ஆண்டு வரை கிடைத்த உண்டியல் வருமானம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாகவே இருந்தது. 1958ல் முதன்முறையாக ஒரு லட்சத்தை தாண்டியது. 1990ம் ஆண்டு முதல் ரூ.1 கோடிக்கும் அதிகமான வருவாய் வரத்தொடங்கியது. பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து