முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூப்பர் குட் பிலிம்ஸின் வரலாறு முக்கியம்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      சினிமா
Jeeva 2022 12 05

Source: provided

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் வரலாறு முக்கியம். ரொமான்ஸ் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ஜீவா, SMS படத்திற்கு பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் என்னை கேட்டார்கள். அப்படி ஒரு படமாய் தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மிகவும்  அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது. 

ஹீரோயின் பிரக்யா மற்றும் காஷ்மீரா இருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியை தருகிறது. இத்திரைப்படத்தில், VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், ஷாரா, சரண்யா, டி எஸ் கே, சித்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் N.B. எடிட்டிங், மோகன் கலை, சக்தி சரவணன் ஸ்டண்ட்ஸ், பிருந்தா நடனம், மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One  மக்கள் தொடர்பு பணிகளை செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து