முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டா குஸ்தி விமர்சனம்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      சினிமா
Kata-Kusti-Review 2022 12 0

Source: provided

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, முனிஷ்காந்த், கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் கட்டா குஸ்தி. குஸ்தி சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் சிறு வயதிலேயே விஷ்ணு விஷாலின் அப்பா, அம்மா இறந்து விட, அவரது மாமாவான கருணாஸ் தான் உலகம் என்று வாழ்கிறார். பெண் என்பவள் ஆணுக்கு கீழ்தான். ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு இருப்பவர் கருணாஸ். அதை விஷ்ணு விஷாலுக்கும் புகுத்துகிறார். இந்நிலையில் கட்டா குஸ்தி வீராங்கனையுடன் விஷ்ணுவுக்கு திருமணம் நடக்கிறது. பின்னர் நடக்கும் கலாட்டாதான் கட்ட குஸ்தி படத்தின் கதை. எஃப்.ஐ.ஆர் படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷாலுக்கு நல்ல ஒரு படமாக கட்டா குஸ்தி அமைந்திருக்கிறது. படத்தில் பெயருக்கு தான் விஷ்ணு விஷால் கதாநாயகன். ஆனால், உண்மையிலேயே படத்தின் கதாநாயகன் என்று பார்த்தால் கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி தான். இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த படம் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட்டாகவும் கணவன், மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு சிக்கல்களையும் அழகாக கையாண்டுள்ளது படத்திற்கு பெரிய பலமாக மாறி உள்ளது. ஸ்போர்ட்ஸ் விளையாடும் பெண்கள் எதிராளியை ஜெயிப்பதற்கு முன்பாக தனது குடும்பத்தை ஜெயிக்க வேண்டி இருக்கும் என்கிற கருத்தை காமெடி கலந்து கொடுத்துள்ள இயக்குநர் செல்லா அய்யாவுக்கு பாராட்டுக்கள். மொத்தத்தில் கட்டா குஸ்தி இந்த வருடத்தின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்று சொல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து