முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை 2 ஆயிரம் பேர் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      உலகம்
Indonesia 2022 12 05

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லுமாஜாங் நகரில் அந்நாட்டின் மிகப் பெரிய எரிமலையான செமேரு உள்ளது. சுமார் 12 ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது. கன மழை காரணமாக செமேரு எரிமலையின் குவி மாடம் சரிந்தது. இதனால் எரிமலையில் நெருப்பு குழும்பு வெளியேற தொடங்கியது. 

எரிமலையில் இருந்து சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது. 5 ஆயிரம் அடி உயரத்துக்கு சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது. அங்குள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் எரிமலை சாம்பல் பரவியுள்ளது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சும்பர்வுலு, சுபிது ராங் கிராமங்களில் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். 

அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மேலே எரிமலை குப்பைகள் கிடந்தன. எரிமலை வெடிப்பு காரணமாக 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அப்பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டுள்ளன. எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியேற்றத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து