Idhayam Matrimony

பத்ம பூஷன் விருது பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் மரணம்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      உலகம்
Dominique-Lapierre 2022 12

புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர்( 91) வயது முதிர்வால் காலமானார். 

டொமினிக் லேபியர் அமெரிக்க எழுத்தாளர் லாரி காலின்ஸுடன் இணைந்து ஆறு புத்தகங்களை எழுதினார். லேபியர் - காலின்ஸுடன் இணைந்து இயற்றிய ஆறு புத்தகங்கள் 50 மில்லியன் பிரதிகள தாண்டி விற்பனையாகியுள்ளன. அவர்கள் இயற்றிய இஸ் பாரிஸ் பர்னிங்? என்ற புத்தகம் உலகப்புகழ் பெற்றது. 

கொல்கத்தாவில் ஒரு ரிக்சாக்காரர் வாழ்க்கையில் படும் கஷ்டங்களைப் பற்றி எழுத்தாளர் டொமினிக் லேபியர் எழுதி, 1985-ல் வெளியான சிட்டி ஆப் ஜாய் என்ற நாவல் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த நாவலை தழுவி ஒரு திரைப்படம் 1992-ல் வெளியானது. சிட்டி ஆப் ஜாய் நாவல் மூலம் தனக்கு கிடைத்த ராயல்டிகளில் பெரும்பகுதியை அவர் இந்தியாவில் பல்வேறு மனிதாபிமான திட்டங்களுக்காக நன்கொடையாக வழங்கி உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2008-ம் ஆண்டு குடியரசு தினத்தில், இந்தியாவின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருது லாபியருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து