முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களின் தொடர் போராட்டம் எதிரொலி: ஈரானில் கலாச்சார சிறப்பு காவல் பிரிவு கலைப்பு

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      உலகம்
Iran-hijab 2022 12 05

பெண்களின் தொடர் போராட்டம் எதிரொலியாக கலாச்சார காவல் பிரிவு கலைக்கப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. 

ஈரானில்  9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க காஸ்த் எர்ஷாத் என்ற  கலாச்சார சிறப்பு காவல் பிரிவு கடந்த 2006 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த போலீசார் பொது இடங்களில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி  தலைநகர் டெக்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்தினரோடு சென்று கொண்டிருந்த மாஷா அமினி என்ற 21 வயது இளம் பெண்ணை ஹிஜாப் அணியவில்லை என கூறி கலாச்சார போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, போலீசார் தாக்கியதில், காயமடைந்த மாஷா அமினி 4 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.

இளம்பெண்ணின் மரணத்தை தொடர்ந்து ஈரானில் பெரும் போராட்டம் வெடித்தது.  அவர்களது போராட்டத்துக்கு உலகெங்கும் ஆதரவு பெருகியது. தொடர் போராட்டத்தை முறியடிக்க முடியாமல் திகைத்து போன ஈரான் அரசு, இந்த விவகாரத்தில் பணிந்தது.  கலாச்சார சிறப்பு காவல் பிரிவு கலைக்கப்படுவதாக ஈரான் அட்டர்னி ஜெனரல் முகமது ஜாபர் மொண்டசெரி அறிவித்துள்ளார். ஈரானின் இந்த அறிவிப்பு, கடந்த இரண்டரை மாதத்துக்கு மேலாக ஹிஜாப்புக்கு எதிராக போராடி வரும் ஈரான் பெண்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து