முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு துப்பாக்கி, வெடிகுண்டு என பெயர் வைக்க வட கொரிய அரசு அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      உலகம்
KIM 2022 12 05

தங்கள் நாட்டின் கொள்கைகளை விளக்கும் வகையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு வெடிகுண்டு, துப்பாக்கி என பெயர் வைக்குமாறு வடகொரிய அரசு வலியுறுத்தியுள்ளது. 

நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர், மென்மையான பெயர்களை வைக்காமல்,  இதுபோன்ற தேசபக்திப் பெயர்களை வைக்க வேண்டும் என்றும், நாட்டின் கொள்கை மற்றும் கருத்தியல் தொடர்புடைய பெயர்களாக இருக்க வேண்டும் என்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உத்தரவிட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏராளமான ஏவுகணை சோதனைகளை நடத்தியும், அணு ஆயுத சோதனை நடத்தியும், அண்டை நாடுகளையும், உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவு நிச்சயம் அந்த நாட்டு மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. 

துப்பாக்கி, வெடிகுண்டு, செயற்கைக்கோள் போன்ற தேசபக்தி பெயர்களை வைக்காமல், மென்மையான பெயர்களை வைக்கும் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தென் கொரியா - வட கொரியா இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு, வட கொரியாவில், முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் நினைவு தினத்தை முன்னிட்டு, 11 நாள்கள் நாட்டில் யாரும் சிரிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து