முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி : தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      இந்தியா
AAP 2021 12-05

Source: provided

புதுடெல்லி : டெல்லி மாநகராட்சியில் உள்ள மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விபரம் வருமாறு:

ஆஜ் தக் செய்தி நிறுவனம்:-

1) ஆம் ஆத்மி 149 முதல் 171 இடங்களில் வெற்றி.

2) பாஜக - 69 முதல் 91 இடங்களில் வெற்றி.

3) காங்கிரஸ் - 3 முதல் 7 இடங்களில் வெற்றி.

நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்:-

1) ஆம் ஆத்மி - 159 முதல் 175 இடங்களில் வெற்றி.

2) பாஜக - 70 முதல் 92 இடங்களில் வெற்றி.

3) காங்கிரஸ் - 4 முதல் 7 இடங்களில் வெற்றி.

டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம்:-

1) ஆம் ஆத்மி - 146 முதல் 156 இடங்களில் வெற்றி.

2) பாஜக - 84 முதல் 94 இடங்களில் வெற்றி.

3) காங்கிரஸ் - 6 முதல் 10 இடங்களில் வெற்றி.

பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து