முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக இயங்கும் பல்வேறு சங்க பிரதிநிதிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      தமிழகம்
CM-1 2021 12-06

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக இயங்கும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி கடந்த 3-ம் தேதி அன்று நடைபெற்ற விழாவில், வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வரை நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி, டிசம்பர்-3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சிம்மச்சந்திரன், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குநர் மனோகரன், தமிழ்நாடு உதவிக்கரம் - மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் வரதகுட்டி உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது, அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து