முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் பயங்கரவாத செயல்பாடுகள்: பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் இந்தியா கவலை

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      இந்தியா
Ajith-Doval 2022 12-06

Source: provided

புதுடெல்லி : ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் பின்னிப் பிணைந்து இயங்குவது கவலை அளிக்கும் விஷயம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்ற முதல் மாநாடு புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய அஜித் தோவல், "ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை நம் அனைவருக்குமே மிக முக்கியமான ஒன்று. ஆப்கன் விவகாரத்தில் நமக்கான முன்னுரிமைகள், முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் ஆகியவை குறித்து இந்தியாவுக்கு கவலை இருக்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. நம் அனைவருக்குமானது. குழப்பம் நிறைந்ததாகவும், எதிர்காலம் நிச்சயமற்றதாகவும் உள்ள நிலையில் நமது இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அமைதியான, பாதுகாப்பான, வளமான பகுதியாக மத்திய ஆசியா திகழ வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் பின்னிப் பிணைந்து காணப்படுவது கவலை அளிக்கிறது. நிதி உதவிகள்தான் பயங்கரவாதத்தின் உயிர்நாடி. அந்த வகையில் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க வேண்டிய கடமை ஐ.நா உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் இருக்கிறது.

மத்திய ஆசிய நாடுகளுடனான தொடர்பு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இந்த பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், முதலீடுகளை மேற்கொள்ளவும், தொடர்புகளை வலுப்படுத்தவும் இந்தியா தயாராக இருக்கிறது. இது நிகழ்வதற்கு வெளிப்படையான, பங்கேற்புடன் கூடிய முன் முயற்சிகளும் ஆலோசனைகளும் அவசியம்" என்று அவர் கூறினார்.

மாநாட்டில் பேசிய கிர்கிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மாரட் இமான்குலோவ், "பயங்கரவாதத்தை ஒழிக்கவும், போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்கவும், ஆப்கானிஸ்தானிய பிரச்சினைக்குத் தீர்வு காணவும் வேண்டும் என்பது மத்திய ஆசிய நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினை. இவ்விஷயத்தில் கிர்கிஸ்தான் முழு ஒத்துழைப்பு வழங்கும்" என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து