முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      அரசியல்
ADMK 2022 12-06

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், 'கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீர்ப்பளித்தார். 

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகிறது. நேற்றைய விசாரணையில், பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட இபிஎஸ் தரப்பு கோரியது. மேலும் 'வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும், தேர்தல் ஆணையத்தின் செயல்பட்டால் கட்சி செயல்பட முடியாத நிலையில் உள்ளது. எனவே, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகததால் வழக்கை ஒத்திவைக்க கோரினர். இதையடுத்து வழக்கு டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து