முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      தமிழகம்
Mandose 2022-12-08

Source: provided

புதுச்சேரி: மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், புதுச்சேரி, காரைக்கால் கடற்கரைக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது புயலாக வலுப்பெற்றுள்ளது. 

மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள புயல், தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 550 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்காலிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல புதுச்சேரி, காரைக்கால் கடற்கரைக்கு பொழுதுபோக்குக்காகவும், சுற்றுலாவினரும் செல்லக்கூடிய நிலையில், யாரும்  கடற்கரைக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து