முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பர் 12-ல் குஜராத்தில் பா.ஜ.க அரசு பதவியேற்பு மீண்டும் முதல்வராகிறார் பூபேந்திர படேல்

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      இந்தியா
Bhupendra-Patel 2022-12-08

Source: provided

காந்திநகர்: குஜராத்தில் பாஜக அரசு வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி பதவியேற்கும் என்று மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். அங்கு மீண்டும் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்கிறார்.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த டிச. 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (டிச. 8) காலை முதல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக முன்னிலை வகித்தது. பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவைப்படும் நிலையில் பா.ஜ.க. 158 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியான நிலையில், இதக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி, குஜராத்தில் பாஜக அரசு பதவியேற்கும் என்று தெரிவித்துள்ளார்.  தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்றுக்கொள்வார் என்றும் கூறினார்.  மேலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து