முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சல் தேர்தலில் வெற்றி: எம்.எல்.ஏ.க்களை சத்தீஸ்கர் அழைத்து செல்கிறது காங்.,

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      இந்தியா
Himachal-Elections- 2022-12-08

Source: provided

ஷிம்லா: இமாச்சல் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலை தடுக்க சத்தீஸ்கர் மாநிலம் அழைத்து செல்ல காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை வசப்படுத்தி ஆட்சி அமைக்கிறது.பாஜக 25 தொகுதிகளிலும், சுயேட்சைகள் மூன்று தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் அவர்களை சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லுமாறு பிரியங்கா காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்எல்ஏக்கள் கட்சித் தாவலில் ஈடுபடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக சுயேட்சைகளின் ஆதரவைக் கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, காங்கிரஸில் இருந்து தாவும் எம்எல்ஏக்கள் ஆதரவையும் திரட்டலாம் என்பதால், காங்கிரஸ் முன்னெச்சரிக்கையாக தனது எம்எல்ஏக்களை பத்திரப்படுவதாக தெரிகிறது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஹரியாணா முதல்வர் பூபீந்திர சிங் ஹூடாவிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரை மாறிமாறி காங்கிரஸும், பாஜகவும் தான் ஆட்சியில் இருந்திருக்கின்றன. இருப்பினும் இந்த முறை காங்கிரஸின் வெற்றியை மாநிலத்தில் உறுதி செய்ய உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பெரும் பங்காற்றியுள்ளார். அவரது பிரச்சாரம் இமாச்சல் மக்கள் மத்தியில் காங்கிரஸ் அபிமானத்தை மீட்டெடுத்ததாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் வெற்றியை அடுத்து பிரியங்கா காந்தி நேற்று இமாச்சல் காங்கிரஸ் பிரமுகர்களுடன் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தத் தேர்தல் வெற்றிக்கான புகழ் பிரியங்காவையே சேரும் என்று உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் பெருமிதத்தோடு தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து