முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.,க்கு எதிரான ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      விளையாட்டு
8-Ram-50

Source: provided

மும்பை: அட்டவணை...

2023 ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஆட்டங்களின் அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் டிசம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது. இதன்பிறகு இந்திய அணி இந்தியாவில் 9 ஒருநாள், 6 டி20, 4 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. 2023 ஜனவரி 3 முதல் ஜனவரி 15 வரை இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களிலும் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரையும் 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. 

3-வது ஒருநாள்...

இந்த அனைத்து ஆட்டங்களிலும் கடைசியாக நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், சென்னையில் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.  இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். 

BOX - 1

இலங்கைக்கு எதிரான டி20:

1) முதல் டி20: ஜனவரி 3, மும்பை.

2) 2-வது டி20: ஜனவரி 5, புணே.

3) 3-வது டி20: ஜனவரி 7, ராஜ்கோட்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள்:

1) முதல் ஒருநாள்: ஜனவரி 10, குவாஹாட்டி.

2) 2-வது ஒருநாள்: ஜனவரி 12, கொல்கத்தா.

3) 3-வது ஒருநாள்: ஜனவரி 15, திருவனந்தபுரம்.

நியூசி.க்கு எதிரான டி-20:

1) முதல் டி20: ஜனவரி 18, ஹைதராபாத்.

2) 2-வது டி20: ஜனவரி 21, ராய்பூர்.

3) 3-வது டி20: ஜனவரி 24, இந்தூர்.

நியூசி.க்கு எதிரான ஒருநாள்:

1) முதல் ஒருநாள்: ஜனவரி 27, ராஞ்சி.

2) 2-வது ஒருநாள்: ஜனவரி 29, லக்னோ.

3) 3-வது ஒருநாள்: பிப்ரவரி 1, ஆமதாபாத்.

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்:

1) முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13, நாகபுரி.

2) 2-வது டெஸ்ட்: பிப்ரவரி 17-21, தில்லி.

3) 3-வது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா.

4) 4-வது டெஸ்ட்: மார்ச் 9-13, அகமதாபாத்.

ஆஸி.க்கு எதிரான ஒரு நாள்:

1) முதல் ஒருநாள்: மார்ச் 17, மும்பை.

2) 2-வது ஒருநாள்: மார்ச் 19, விசாகப்பட்டினம்.

3) 3-வது ஒருநாள்: மார்ச் 22, சென்னை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து