முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள்: 3 இந்திய வீரர்கள் விலகல்

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      விளையாட்டு
8-Ram-51

Source: provided

மிர்புர்: வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்திலிருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா உள்ளிட்ட மூன்று இந்திய வீரர்கள் விலகியுள்ளனர்.

2-0 என முன்னிலை... 

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 266 ரன்களே சோ்த்தது. ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வென்ற வங்கதேசம், 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ரோகித் உள்ளிட்ட...

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்திலிருந்து காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா, தீபக் சஹார், குல்தீப் சென் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் விலகியுள்ளார்கள். 2-வது ஒருநாள் ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்றபோது ரோஹித் சர்மாவின் விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச இன்னிங்ஸில் கே.எல். ராகுல் கேப்டனாகச் செயல்பட்டார். இதன்பிறகு காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரோஹித் சர்மா, 9-வது பேட்டராகக் களமிறங்கி 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து போராடித் தோற்றார். இதையடுத்து 3-வது ஒருநாள் ஆட்டத்திலிருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளார். மேலும் டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. 

டெஸ்ட் தொடரில்...

நேற்று முன்தினம் மூன்று ஓவர்கள் மட்டும் வீசிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், அதன்பிறகு காயம் காரணமாகப் பந்துவீசவில்லை. குல்தீப் சென் காயம் காரணமாக 2-வது ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா  உடனடியாக மும்பைக்குச் சென்று மருத்துவர்களைச் சந்திக்கவுள்ளதாக பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார். காயத்திலிருந்து குணமாகி டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்பாரா என்பது குறித்து தனக்குத் தெரியாது. இப்போதே அதுகுறித்து முடிவெடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து