முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் சீன அச்சுறுத்தல் எதிரொலி: பிரளய் ஏவுகணைகளை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2022      இந்தியா
Pralai-Missile 2022-12-26

Source: provided

புதுடெல்லி : இந்தியா - சீன எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவிவரும் சூழலில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 120 பிரளய் ஏவுகணைகள் வாங்க ராணுவத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்த ஏவுகணைகள் வெகு விரைவில் தயாரிக்கப்பட்டு இந்திய - சீன எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தெரிவிக்கின்றது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் இருந்து மற்றொரு நில இலக்கை தாக்கக்கூடிய புதிய தலைமுறை ‘பிரளய்’ ஏவுகணை 150 முதல் 500 கி.மீ. தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை இந்திய உந்துவிசை ஏவுகணை திட்டத்தின்கீழ், பிருத்வி ஏவுகணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இது அதிநவீன மோட்டார் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டது.

அண்மையில் கடற்படை தளபதி ஹரி குமார் பேசுகையில், "எல்லையில் எதிரிகளை எதிர்கொள்ள ஏவுகணைகளை பெருமளவில் தயாரித்து தயார் நிலையில் வைக்க மறைந்த முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறப்புத் திட்டமே வகுத்திருந்ததாக சுட்டிக் காட்டியிருந்தார்" என்று கூறியிருந்தார். இந்நிலையில்,120 பிரளய் ஏவுகணைகளை தயாரிக்க ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து