முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமர்சனங்களுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2022      இந்தியா
Rahul 2022-12-26

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் எம்.பி. தலைவர் ராகுல் காந்தி நேற்று(டிச.26) காலை மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்த விமர்சனங்கள், எதிர்ப்புகளை மீறி அவர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்தி தலைவர்களில் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது நேற்று முன்தினம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அது சாத்தியப்படாததால் நேற்று காலை ராகுல் காந்தி தலைவர்கள் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

ஆனால் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் வாய்பாயியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தின் 4 ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான கவுரவ் பாந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாஜ்பாயியை வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.

வாஜ்பாய் ஒரு பிரிட்டிஷ் உளவாளியாக இருந்தார், அவர் பாபர் மசூதி கலவரத்தின் போது மக்களிடம் மோதலைத் தூண்டினார், நெல்லி படுகொலையைத் தூண்டினார் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை காங்கிரஸார் அவர் மீது பட்டியலிட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்த விமர்சனங்கள், எதிர்ப்புகளை மீறி அவர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நெல்லி படுகொலை என்பது 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 காலையில் இருந்து தொடர்ந்து ஆறு மணி நேரம் மத்திய அசாமில் நடந்தது. இந்த படுகொலையில் அலிசிங்கா, குலபதர், பசுந்தாரி, புக்தூபா பீல், புகுபாபா ஹபி, போர்ஜோலா, புட்டூனி, டோங்காபோரி, இந்தூர்மரி, மாடி பர்பத், முலதாரி, மாத்தி பர்பத் எண். 8, சில்பெட்டா, போர்பூரி மற்றும் நெல்லி, நகாமோ என்று 14 கிராமங்களைச் சேர்ந்த 2,191 நபர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து