முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 நாள் பயணமாக தெலங்கானா வந்தார் ஜனாதிபதி திரெளபதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2022      இந்தியா
Murmu 2022-11-18

Source: provided

ஐதராபாத் : 5 நாள் பயணமாக ஐதராபாத்து வந்தடைந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

ஷம்ஷாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் ஹெலிகாப்டர் மூலம் ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலத்திற்கு புறப்பட்டார். ஸ்ரீசைலம் கோயிலுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மாலை ஐதராபாத் திரும்பும் அவர், டிசம்பர் 30ஆம் தேதி வரை செகந்திராபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தங்க உள்ளார். 

கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்ற பிறகு தெலங்கானாவுக்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும். விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, தெலங்கானா பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோர் மற்றும் மூத்த அதிகாரிகள் ஜனாதிபதி முர்முவை வரவேற்றனர்.

பின்னர், ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீசைலம் புறப்பட்டார். ஆளுநர் மற்றும் அமைச்சர் கிஷன் ரெட்டியும் தனித்தனி ஹெலிகாப்டர்கள் மூலம் ஸ்ரீசைலம் புறப்பட்டுச் சென்றனர்.  ஜனாதிபதி ஸ்ரீசைலம் கோயிலுக்குச் சென்று, ஸ்ரீசைலம் கோயிலின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

இன்று (டிச.27) ஐதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் முர்மு கலந்துரையாடுகிறார். பின்னர், சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகடாமிக்கு சென்று பயிற்சியாளர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். ஐதராபாத்தில் மிஸ்ரா தாது நிகாம் லிமிடெட் (மிதானி) வின் வைட் பிளேட் மில்லையும் அவர் திறந்து வைக்கிறார்.

நாளை (டிச.28) பத்ராசலம் ஸ்ரீ சீத்தாராம சந்திர சுவாமிவாரி தேவஸ்தானத்திற்குச் சென்று பிரசாத திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும் அவர் திறந்து வைக்கிறார். மேலும், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ராமப்பா கோயிலுக்குச் சென்று,  சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் காமேஸ்வராலய கோயிலின் மறுசீரமைப்புக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். 

டிசம்பர் 29ல் ஐதராபாத்தில் உள்ள பி.எம்.மலானி நர்சிங் கல்லூரியில் ஆசிரியர்களுடன் முர்மு கலந்துரையாடுகிறார். அன்றைய தினம், ஷம்ஷாபாத் ஸ்ரீராம்நகரில் உள்ள சமத்துவ சிலையை அவர் பார்வையிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து