முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்த புதுவை அரசு முடிவு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2022      இந்தியா
Pondy 2022-12-27

Source: provided

புதுச்சேரி : பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. 

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாண்லே மூலம் பால் மற்றும் தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தரமாகவும், சலுகை விலையிலும் கிடைப்பதால் இந்த பொருட்களுக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில், அரசு நிறுவனமான பாண்லே பால் விலையை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்படி, தற்போது 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு லிட்டர் பாலை, 4 ரூபாய் உயர்த்தி 48 ரூபாய்க்கு விற்பனை செய்ய புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.

இதே போல், கொள்முதல் விலையும் லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி 34-ல் இருந்து 37 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஓராண்டாக பாண்லே நிறுவனம் தொடர் நஷ்டத்தில் இயங்குவதால் அதனை ஈடுகட்ட பால் விலை உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து