முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி சந்திப்பு: சுற்றுச்சூழல் மண்டல விவகாரம் குறித்து ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2022      இந்தியா
Pinarayi-Vijayan 2022-12-27

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளத்தில் வனப் பகுதியை ஒட்டிய பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவித்திருப்பதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, கேரள வனத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவுப் பகுதிகள் சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து எடுத்துக் கூறியதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

வனத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையிலான பகுதிகளை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளோ தொழிற்சாலைகளோ இருக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த உத்தரவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது நடைமுறைப்படுத்த முடியாத தீர்ப்பு என தெரிவித்துள்ள கேரள அரசு, கேரளாவில் வனத்தை ஒட்டிய பகுதிகள் பலவற்றில் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தினால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வனத்தை ஒட்டிய பகுதிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்கள் வாழ்ந்து வருவதால் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது அரசுக்கு இயலாத காரியம் என்றும் அது தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கேரள அரசு, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பினராயி விஜயன், இந்த விஷயத்தில் கேரள அரசுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான அதிவேக ரயில் பாதை திட்டத்திற்கு இன்னும் மத்திய அரசு அனுமதி வழங்காதது குறித்தும் பிரதமரிடம் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு, கொரோனா கால செலவினங்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து