முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைசூரு அருகே சாலை விபத்து: பிரதமரின் சகோதரர் காயம்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2022      இந்தியா
Modi-Car 2022-12-27

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே நடந்த சாலை விபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (டிச.,27) பிற்பகல் 1:30 மணியளவில், பிரஹலாத் மோடி, அவரது மகன், மருமகள் மற்றும் குழந்தை ஆகியோர் காரில் பந்திப்பூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலை தடுப்பான் மீது கார் மோதியது. இந்த விபத்தில் பிரஹலாத் மோடி, குடும்பத்தினர் மற்றும் டிரைவர் காயமடைந்து ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த மைசூரு போலீஸ் எஸ்.பி., சீமா லட்கர், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன், மருத்துவமனைக்கும் நேரில் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து