முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'திராவிட மாடல்' போன்ற வார்த்தைகளை அதிகம் தவிர்த்த கவர்னர்: சட்டசபையில் இருந்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2023      தமிழகம்
RN-Ravi-2 2023-01-09

Source: provided

சென்னை : கவர்னர் நேற்று தனது உரையில் 'திராவிட மாடல்', 'தமிழ்நாடு' போன்ற வார்த்தைகளை அதிகம் தவிர்த்தார். சட்டசபை கூடியதும் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் இருந்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம்   நேற்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் ஆா்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்கியது. சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது.  கவர்னர் ஆர். என். ரவி உரை நிகழ்த்துவதற்காக காலை 9.55 மணிக்கு பேரவைக்கு வருகை தந்தார். அவருக்கு பேரவை வாசலில் பேண்டு வாத்தியத்துடன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கவர்னரை, பேரவைத் தலைவர் அப்பாவு, பேரவைச் செயலாளர்கள் சீனிவாசன் ஆகியோர் மரபுப்படி பேரவைக்குள் அழைத்து வந்தனர். சரியாக 10.01 மணிக்கு கவர்னர் அவைக்குள் வந்தார். அவர் வருவதற்கு முன்னதாகவே முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் அமர்ந்து இருந்தனர்.

கவர்னர் வந்ததும் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் இருக்கைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். உடனே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதையடுத்து கவரனர் ஆர்.என்.ரவி தமிழில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசினார். 

இதைத் தொடர்ந்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் வாழ்த்துகளையும் தமிழில் கூறினார். துண்டுச் சீட்டில் எழுதி வைத்திருந்த வாசகங்களை வைத்து தமிழில் வாழ்த்துகளை தெரிவித்தார். 

கவர்னர் தமிழில் தனது உரையை பேசத் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் இருக்கையை விட்டு கவரனர் அருகே வந்து அவர் முன்பு கோஷங்களை எழுப்பினார்கள்.

'வாழ்க வாழ்க தமிழ்நாடு' வாழ்கவே', எங்கள் நாடு தமிழ்நாடு... உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். சுமார் 8 நிமிடங்கள் அவர்கள் கையை உயர்த்தியபடி கோஷமிட்டனர். ஆனாலும் கவர்னர் அதை கண்டுகொள்ளாமல் தனது உரையை வாசித்துக் கொண்டு இருந்தார். கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பிய திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கவர்னரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதன்படி காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பும் வரை நின்று கொண்டிருந்த பாமக உறுப்பினர்களும் கோஷம் போடத் தொடங்கினார்கள்.  ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய், மசோதாவிற்கு அனுமதி கொடுங்கள் போன்ற முழக்கங்களை எழுப்பினார்கள். ஒரு துண்டுச் சீட்டில் ஆங்கிலத்தில் எழுதிய வாசகங்களை கவர்னர் முன் ஏந்தி முழக்கமிட்டனர். அதன்பிறகு ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக உறுப்பினரும் கவர்னர் உரையை புறக்கணித்து பேரைவயில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் நேற்றைய பேரவைக் கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

33 இடங்களில் 'தமிழ்நாடு'

அரசு தயாரித்து அளித்த 8 பக்க கவர்னர் உரையில் உள்ள தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிப்பதைத் தவிர்த்த கவரனர் ஆர்.என்.ரவி, தமிழக மக்கள் போற்றும் முக்கிய தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா  ஆகியோரின் பெயர்களையும் அவர் குறிப்பிடவில்லை. தமிழ்நாடு அரசு தயாரித்து கவரனர் ஒப்புதல் அளித்த 48 பக்கங்கள் கொண்ட உரையில் 33 இடங்களில் 'தமிழ்நாடு அரசு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து