முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணிவு விமர்சனம்

புதன்கிழமை, 11 ஜனவரி 2023      சினிமா
Tu-ivu-vimarca-am 2023-01-1

Source: provided

அஜித் எச்.வினோத் போனிகபூர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் துணிவு.  நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இப்படம் இவர்களின் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படைப்பாகும். இதில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கென், அஜய், தர்ஷன், பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பால சரவணன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் மக்களுக்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். கதை: இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு தணியார் வங்கியின் சென்னை கிளை அலுவலத்தை கொள்ளையர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அந்த வங்கியையும், அங்கு இருக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை காவல் துறை அதிகாரியான சமுத்திரகனி ஏற்கிறார். அவருக்கு சவால் விடும் வகையில் அஜித் குமாரின் செயல் பாடுகள் இருக்கிறது. அந்த வங்கி எதற்காக கொள்ளையடிக்கப்படுகிறது? வங்கியிலுள்ள பணம் மீட்கப்பட்டதா? அஜித் குழுவினர் என்ன ஆனார்கள் என்பதே துணிவு படத்தின் கதை.

பணத்திற்காக ஒவ்வொரு ஏழை மக்கள் எப்படி பாடுபடுகிறார்கள். ஆனால் பணம் படைத்தவன் என்னென்ன கோல் மால் செய்கிறான். மக்கள் பணம் எப்படி வங்கிகளால் சுரண்டப்படுகிறது? மக்கள் எவ்வாறு  விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்? என்பதை, அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். படத்தின் முதல் காட்சியிலேயே ரசிகர்களை தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார் அஜித். அவரின் உடல்மொழி, வசனங்கள், நக்கலான சிரிப்பு, ஸ்டைலான நடனம் என அனைத்தும் அட்டகாசமாகவும், அமர்களமாகவும் அமைந்திருக்கின்றன. அதே போல் ஆக்சனில் அசத்தியிருக்கிறார் மஞ்சு வாரியார். ஜிப்ரான் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இதுவரை பார்க்காத வேறொரு அஜித்தை ரசிகர்களின் முன்பு நிறுத்தி பரபரப்பான திரைக்கதையில் பட்டையை கிளப்பி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து