முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதங்களும், மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன : ஜனாதிபதி முர்மு குடியரசு தின வாழ்த்து

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      இந்தியா
Murmu 2022-11-18

Source: provided

புதுடெல்லி : மதங்களும், மொழிகளும் நம்மை பிளவுபடுத்தவில்லை, ஒன்றிணைத்துள்ளன என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு குடியரசு தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேதிய தலைநகர் புது டெல்லியில் கடமைப்பாதையில் நடைபெறும் கண்கவர் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்ற உள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுடன் நேற்று மாலை 7 மணி உரையாற்றினார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது, நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குடியரசு தினத்தை கொண்டாடும்போது, ஒரு தேசமாக நாம் எதை அடைந்தோமோ, அதை கொண்டாடுகிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் ஜனநாயக குடியரசாக நாம் வெற்றியடைந்துள்ளோம்.

பல்வேறு விதமான மதங்களும், மொழிகளும் நம்மை பிளவுபடுத்தவில்லை, மாறாக ஒன்றிணைத்துள்ளன. உலகின் மிகச்சிறந்த நாகரிகங்களில் ஒன்று இந்தியா. அம்பேத்கர் உள்ளளிட்ட பல ஆளுமைகள் நமக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது.

அரசாங்கத்தின் செயல்பாடுகளால் இது சாத்தியமானது. 'ஆத்மநிர்பர் பாரத்' முயற்சி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவை வெறும் கோஷங்கள் அல்ல. சமீப ஆண்டுகளில் இந்த லட்சியங்களில் நாம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். நாளைய இந்தியாவை வடிவமைக்க பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து