முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது: போப் பிரான்சிஸ்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      உலகம்
Pope-Francis 2023 01 26

ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் போல்   நடத்தக் கூடாது என்று என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 

போப் பிரான்சிஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 

உலகின் சில நாடுகளில் உள்ள கத்தோலிக்க பிஷப்கள் ஓரின சேர்க்கையாளர்களை  தண்டிக்கும் அல்லது துன்புறுத்தும் சட்டங்களை ஆதரிக்கின்றனர். இது போன்ற செயல்கள் பாவம் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஓரின சேர்க்கையாளர்கள் உட்பட  அனைவரின் கண்ணியத்தை காப்பாற்றுவதில் பிஷப்கள் தங்கள் மனநிலையை மாற்றி கொள்ள வேண்டியது அவசியம். கடவுள்  அனைவரையும் தனது குழந்தையாகவே கருதுகிறார்.

எனவே, ஓரின சேர்க்கையில் ஈடுபடும் நபர்களை  சர்ச்சுக்குள் வருவதை  பிஷப்கள் வரவேற்க வேண்டும். அவர்களை குற்றவாளிகள் போல் நடத்தக் கூடாது, பாரபட்சம் காட்டக்கூடாது என்று தெரிவித்தார். 

இந்த நிலையில் மனித கவுரவ அறக்கட்டளை என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் உள்ள 67 நாடுகள் ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வதற்கு தடை விதித்துள்ளன. 

இதில் 11 நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு  மரண தண்டனை கூட விதிக்கப்படுகிறது. அமெரிக்காவில்  12-க்கும் மேற்பட்ட மாகாணங்களில்   ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் இன்னும் அமலில் உள்ளன என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து