முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் அமைப்புகள் மீது ஈரான் பொருளாதார தடை

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      உலகம்
Iran 2023 01 26

ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டனை சோ்ந்த 34 நபா்கள், அமைப்புகள் மீது ஈரான் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. 

ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி என்ற 22 வயது பெண் கடந்த செப்டம்பா் மாதம் காவலில் உயிரிழந்தாா். அதனைத் தொடா்ந்து அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. அந்தப் போராட்டங்களை மிகக் கடுமையான முறையில் அடக்கிய ஈரான் அரசு, போராட்டக்காரா்கள் சிலருக்கு மரண தண்டனை விதித்து சிலரை தூக்கிலிட்டது.  

இதனைக் கண்டிக்கும் வகையில் ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் ஈரான் மீது  பொருளாதாரத் தடை விதித்தன. இதற்குப் பதிலடியாக ஈரானும் தற்போது பொருளாதாரத் தடையை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து