முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      தமிழகம்
Stalin 2023 01-23

தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வாகி உள்ள பிரபல பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்ட 6 பேருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆறு பத்ம விபூஷன், ஒன்பது பத்ம பூஷன் மற்றும் 91 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும். 

தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை), பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் (சமூகப்பணி), பாலம் கல்யாணசுந்தரம் (சமூகப்பணி), கோபால்சாமி வேலுச்சாமி (மருத்துவம்) ஆகிய ஆறு பேருக்கும் எனது மனமகிழ் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.  நாட்டின் உயரிய விருது பெறவிருக்கும் தாங்கள் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் நமது மாநிலத்தை பெருமையடைய செய்துள்ளீர்கள். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து