முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

74-வது குடியரசு தினவிழா: சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      தமிழகம்
CM-1 2023 01 26

குடியரசு தினவிழாவை முன்னிட்டு பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார். 

நாட்டின் 74-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காவல் பதக்கம், கோட்டை அமீர் விருது, வேளாண் துறை சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்தார். 

இதில் சென்னை தலைமைக்காவலர் சரவணன், வேலூர், செவிலியர் ஜெயக்குமார், பொன்னரசு, தூத்துக்குடி அந்தோணிசாமி, கன்னியாகுமரி ஸ்ரீகிருஷ்ணன் தஞ்சை செல்வம் ஆகியோருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது 3 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் வடக்கு, திருச்சி கோட்டை, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையங்கள் முறையே முதல் மூன்று பரிசுகளை பெற்றன. காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார். அதைத் தொடர்ந்து முதல்வருடன் பதக்கம் பெற்றவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து