முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

74-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றி வைத்தார் கவர்னர் ஆர்.என். ரவி

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      தமிழகம்
CM-3 2023 01 26

நாட்டின் 74-வது குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடந்த விழாவில் தமிழக கவர்னர்  ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி வைத்தார். அவர் கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். 

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே கவர்னர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்று விழா நடைபெற்றது. 

விழாவிற்கு முதலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி விழாவிற்கு வருகை தந்தார். கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதை தொடர்ந்து தமிழக கவர்னர்  ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி வைத்தார். அவர் கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். 

முன்னதாக நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில், நாட்டுக்காக உயிர் தியாக செய்த தீரமிக்க வீரர்களை நாம் நன்றியுடன் நினைவுகூர்வோம். நமது ராணுவத்திற்கு நன்றி செலுத்துவோம். காலத்தை வென்ற அரசியலமைப்பு வழங்கிய அம்பேத்கருக்கு நன்றி தெரிவிப்போம். 

ருக்மணி லட்சுமிபதி குயிலி அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவோம். வ.உ.சி, பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்துவோம். வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. 

இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. இலங்கை தமிழர் நலனுக்காக மத்திய அரசு உதவுகிறது. அங்கு வசிக்கும் தமிழர்களுக்காக வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்காக தமிழக அரசும் உதவுகிறது. வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரதம் என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து