முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 நாட்களில் 2 அடி சரிந்து 104.60 அடியாக உள்ளது: மேட்டூர் அணை நீர்மட்டம்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      தமிழகம்
Mettur-dam- 2023 01 26

மேட்டூர் அணை நீர்மட்டம், படிப்படியாக சரிந்து நேற்று காலை 104.60 அடியாக உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 2 அடி சரிந்துள்ளது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 815 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 885 கன அடியாக வந்து கொண்டிருந்தது.  அணையிலிருந்து காவிரியில் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. 

கடந்த 22-ம் தேதி 106.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், படிப்படியாக சரிந்து நேற்று காலை 104.60 அடியாக உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 2 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து