முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியா பங்காற்றி வருகிறது: ரஷ்ய அதிபர் புடின் குடியரசு தின வாழ்த்து

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      உலகம்
Putin 2023 01 26

சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியா பெருமளவில் பங்காற்றி வருகிறது என ரஷ்ய அதிபர் புடின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

நாட்டின் 74-வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது.  இதனை முன்னிட்டு ரஷ்ய அதிபர் புடின், தனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 

குடியரசு தின வாழ்த்துகளை தயவு செய்து ஏற்று கொள்ளுங்கள். பொருளாதார, சமூக, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் பிற தளங்களில் இந்தியாவின் சாதனைகள் பரவலாக அறியப்பட்டவை. உங்களுடைய நாடு சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் பெருமளவில் பங்காற்றி வருகிறது. 

இதே போன்று மண்டல மற்றும் சர்வதேச செயல்திட்டங்களில் முக்கிய விவகாரங்களை பற்றி பேசுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் இணைந்து பணியாற்றுவதன் வழியே அனைத்து துறைகளிலும், பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியை நாம் உறுதி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார். 

மேலும் ரஷ்யா மற்றும் இந்தியா என இரு நாடுகளின் நட்பு ரீதியிலான மக்களின் அடிப்படை நலன்களை சந்தேகமேயின்றி அது பூர்த்தி செய்யும் என்றும் அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து