முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளியில் படிப்பை தவிர வேறு வேலையில் மாணவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      தமிழகம்
Anbil-Mahesh 2023 01 31

Source: provided

தஞ்சாவூர் : பள்ளிகளில் படிப்பை தவிர மாணவர்களை வேறு வேலையில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில்மகேஷ் எச்சரித்துள்ளார். 

தஞ்சையில் நேற்று முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 

மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். நான் மாணவர்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து தான் அவர்களுக்கான திட்டங்களை கொண்டு வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். அதில் இருந்தே அவர் எந்த அளவுக்கு மாணவர்களின் படிப்பில் அக்கறை கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. 

பள்ளிகளில் மாணவ, மாணவிகளை படிப்பை தவிர பள்ளியை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட வேறு எந்த வேலையிலும் ஈடுபடுத்தக் கூடாது. அதனையும் மீறி ஈடுபடுத்தினால் சம்பந்தபட்ட ஆசிரியர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொது தேர்வில் மாணவர்களின் ஆப்சென்ட் விகிதம் மிக குறைவாக தான் இருக்கும். அனைத்து மாணவர்களும் விடுபடாமல் பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அதே போல் தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டை விட கூடுதலாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து