முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரி இறக்கும் எந்திரங்களின் செயல்பாடுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் தளம் 1-ல் புதிதாக 325 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட இரண்டு நிலக்கரி கையாளும் எந்திரங்களின்செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

இப்புதிய இயந்திரங்கள் வாயிலாக குறுகிய காலத்தில் 6 முதல் 8 பெரிய கப்பல்கள் மூலம், கப்பல் ஒன்றிற்கு 70,000 டன் முதல் 75,000 டன் வரை அதிக கொள்ளளவு நிலக்கரியை இறக்க முடிவதால் நிலக்கரியை கையாளும் சரக்குக் கட்டணம் டன் ஒன்றிற்கு ரூ.700-லிருந்து ரூ.540 ஆக குறையும். இதனால், ஆண்டொன்றிற்கு சுமார் 80 கோடி ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சேமிப்பாகக் கிடைக்கும். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கீதா ஜீவன், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு, எரிசக்தித் துறை கூடுதல்  தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, இயக்குநர் சிவலிங்கராஜன், இயக்குநர்  இராசேந்திரன், இயக்குநர் இராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து