முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-20 மாநாடு: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      தமிழகம்
G20-Summit 2023 01 28

Source: provided

சென்னை : சென்னையில் நாளை 2-ம் தேதி வரை ஜி-20 கல்வி செயற்குழு மாநாட்டின் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதனால் பிரதிநிதிகள் செல்லும் வழித்தடங்கள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைப்பகுதியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா இதர வான்வெளி வாகனங்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர். 

இது குறித்து சென்னை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  

சென்னையில் நேற்று முதல் வரும் 2-ம் தேதி வரை ஜி-20 கல்வி செயற்குழு மாநாட்டின் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சிகள் மாமல்லபுரத்திலும் நடக்கிறது. இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

இந்த பிரதிநிதிகள் சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல், தாஜ் கன்னிமாரா, ஹயாத், தாஜ் கிளப்ஹவுஸ் ஆகிய ஓட்டல்களில் தங்குகிறார்கள். ஐ.ஐ.டி.ஆராய்ச்சி பூங்காவில் நடைபெறும் கருத்தரங்கிலும் பங்கேற்கிறார்கள். எனவே மேற்கூறப்பட்ட சென்னை நகரில் உள்ள எல்லைப் பகுதியும், மேற்படி பிரதிநிதிகள் செல்லும் வழித்தடங்களும் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த எல்லைப்பகுதியில் மேற்கூறப்பட்ட நாட்களில் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லா இதர வான்வெளி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து