முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமிக்கு மிக அருகே வரும் பச்சை வால் நட்சத்திரம் இன்று முதல் 4 மாதங்களுக்கு வானில் பார்க்கலாம்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      தமிழகம்
Green-comet 2023 01 29

Source: provided

கொடைக்கானல் : 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமி சுற்று வட்ட பாதைக்கு வரும் பச்சை வால் நட்சத்திரத்தை இன்று(பிப்.1) முதல் 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்க்கலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானி எபினேசர் செல்லசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: "பரந்த வான்வெளியில் சிறிய மாற்றங்களைக்கூட கண்டறியும் ஜூவிகி தொலைநோக்கி மூலம் இந்த பச்சை வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. இந்த வால் நட்சத்திரம் ஜன.12-ம் தேதி சூரியனை கடந்து நாளை (பிப்.1) பூமிக்கு மிக அண்மையில் வரும். அதாவது, கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடக்கிறது. இதை தொலைநோக்கியின் உதவி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும்.

இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் இந்த வால் நட்சத்திரத்தை நிறநிரல்மானி (ஸ்பெக்ட்ரோஸ்கோப்) மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று முதல் பிப்.1-ம் தேதி காலை 4 மணி வரை இந்த நட்சத்திரத்தை பார்க்க முடியும். தொடர்ந்து, அடுத்து 4 மாதங்களும் வெவ்வேறு கால நிலைகளில் இந்த நட்சத்திரத்தை பார்க்கலாம்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து