முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியை தொடங்கினார் சென்னை கேப்டன் டோனி

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      விளையாட்டு
Tony 2023 01 31

Source: provided

ஐபிஎல் 16-வது சீசன் வரும் ஏப்ரலில் தொடங்குகிறது. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில் இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதிகமுறை ஃபைனலுக்கு முன்னேறிய, 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் எம்எஸ் டோனி.

இந்நிலையில், 41 வயதான டோனி ஐபிஎல் 16-வது சீசனுக்கான வலைப்பயிற்சியை மற்ற அனைத்து வீரர்களுக்கும் முன்பாகவே தொடங்கிவிட்டார். ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவரும் டோனிக்கு வேறு போட்டிகளில் ஆடும் பயிற்சி இல்லை என்பதால், முன்கூட்டியே வலைப்பயிற்சியை தொடங்கிவிட்டார். 2 வாரங்களுக்கு முன்பே பயிற்சியை தொடங்கிவிட்ட டோனி, வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்டுகளை அடித்து ஆடிய வீடியோ வைரலாகிவருகிறது. 

________________

ரிஷிகேஷ் ஆசிரமத்தில் வழிபாடு செய்த விராட்- அனுஷ்கா தம்பதி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். தம்பதிகள் சுவாமி தயானந்த கிரி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். அனுஷ்காவும் விராட்டும் ஆசிரமத்தில் வழிபடுவது போன்ற பல படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் அங்கு வந்த ரசிகர்களுடன் செல்பியும் எடுத்து கொண்டனர்.

விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் ஆசிரமத்தில் நடைபெறும் பொது மதச் சடங்குகளில் பங்கேற்று பின்னர் பண்டாரா (மத விருந்து) ஏற்பாடு செய்தார்கள் என்று கூறப்படுகிறது. விராட் மற்றும் அனுஷ்கா இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் விருந்தாவனத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஆசி பெற்ற சில நாட்களுக்குப் பிறகு ரிஷிகேஷுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

________________

திறமையானவர்களை கண்டறிய ஐ.பி.எல். உதவும்: ஹர்மன்பிரித் 

முதலாவது பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டி தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கபூர் கூறியதாவது:- ஆண்கள் கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட் டிக்கு பிறகு வீரர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆண்கள் கிரிக்கெட்டில் நாம் பார்த்த திறமை வெளிபாட்டை பெண்கள் ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு பார்க்கலாம்.

இது இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும். பெண்கள் ஐ.பி.எல். மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும். இது சர்வதேச அரங்குக்கு தயாராகும் வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கும். பெண்கள் ஐ.பி.எல். மூலம் பல இளம் மற்றும் திறமையான வீராங்கனைகளை இந்தியாவுக்கு கண்டறிய முடியும். நாங்கள் சில காலமாக தாக்குதல் ஆட்டத்தில் விளையாட முயற்சித்து வருகிறோம். ஆக்ரோஷமாக கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று அணி கூட்டங்களில் அடிக்கடி விவாதிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

________________

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: ஆஸி. வீரர் ஸ்டார்க் விலகல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்த நிலையில் கைவிரல் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.

விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதால் இந்தியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என்றார்.

________________

குல்தீப்பை தேர்வு செய்ய சுனில் ஜோஷி யோசனை

இந்திய தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி 2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ்வை நீக்கிய பிறகு உத்தரப்பிரதேச அணியில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். கையை சுழற்றுவதில் முன்பு மெதுவாக சுழற்றினார். இப்போது கொஞ்சம் வேகமாக சுழற்றுகிறார். அவர் வீசும் திசையும் நன்றாக உள்ளது. முன்பை விட இப்போது பந்து அதிகமாக ஸ்பின் ஆகிறது.

சாஹல் கையை மெதுவாகச் சுழற்றுகிறார் இதனால் பந்தில் ஸ்பின் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் பேட்டர்கள் அவர் பந்துகளை எளிதில் அடித்து விட முடிகிறது. இப்போதெல்லாம் உடல் செயற்பாடில்லாமல் வெறுமனே கையால் பந்தை ரிலீஸ் மட்டுமே செய்கிறார். இதனால் பிளாட்டாக விழுகிறது. ஆனால் குல்தீப் அந்த விதத்தில் நல்ல நிலையில் இருக்கிறார். ஆகவே உலகக்கோப்பை போட்டிகளில் குல்தீப் யாதவ்வுக்குத்தான் இடமளிக்க வேண்டும். இவ்வாறு சுனில் ஜோஷி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து