முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      உலகம்
New-York 2023 02 01

Source: provided

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. 

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஹெம்ப்ஸ்டெட் நகரில் உள்ள லிடோ கடற்கரையில் கடந்த திங்கட்கிழமை காலை ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு திமிங்கலம் உயிருடன் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து மீட்பு குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திமிங்கலத்தை மீட்டு கடலுக்குள் விடுவதற்காக அங்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் திமிங்கலம் இறந்தது. இதனையடுத்து, மீட்பு குழுவினர் 35 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத திமிங்கலத்தை கிரேன் மூலம் கடற்கரையில் இருந்து நகர்த்தினர். 

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் திமிங்கலங்கள் இப்படி மர்மமான முறையில் இறந்து, கரை ஒதுங்குவது தொடர் கதையாகி வருகிறது. நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தையும் சேர்த்து, கடந்த 2 மாதத்தில் மட்டும் 15 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து