முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட்டில் இ-கோர்ட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு : மத்திய சட்ட அமைச்சர் வரவேற்பு

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      இந்தியா
Kiran-Rijiju 2023-01-16

Source: provided

புதுடெல்லி : ரூ.7 ஆயிரம் கோடி இ-கோர்ட்திட்ட ஒதுக்கீடு நீதி வழங்கல் நடைமுறையை மேம்படுத்தும் என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.

பாராளுமன்ற மக்களவையில் 2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்து பேசினார். இதில், பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை முன்னிட்டு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பட்ஜெட்டுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், காகிதமில்லா கோர்ட்டுகளை உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது, விரைவாக நீதி வழங்க வழிவகை செய்யும். 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இ-கோர்ட்டுக்கான 3-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, சரியான நேரத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டதற்காக பிரதமர் மோடிஜி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்ஜிக்கு நன்றி கூறி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

கோர்ட் ஆவணங்கள் முழுவதும் டிஜிட்டல்மயம் ஆக்குவது, வருங்காலத்தில் காகிதமில்லா சூழல் உருவாக வழியேற்படும். இதனால், எளிதில் நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். நீதி வழங்கும் நடைமுறையும் இன்னும் மேம்படுத்தப்படும். இதனையே பிரதமர் மோடியின் லட்சியங்களில் ஒன்றாக எப்போதும் இருந்து வருகிறது என தெரிவித்து உள்ளார். இந்த இ-கோர்ட் திட்டத்தின் வெற்றிக்கு சுப்ரீம் கோர்ட்தலைமை நீதிபதியே காரணம் என நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு தனது பாராட்டுகளை ரிஜிஜூ தெரிவித்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து