முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டா மாறுதல் போன்றவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

வேலூர்: பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் தடுக்க வேண்டும் என வேலூரில் நேற்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். 

அப்போது குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து, இளைஞர் திறன் மேம்பாடு பற்றி ஆய்வு செய்த முதல்வர், மக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்தும், நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் கள ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

பல வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்தாலும் அதனை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு உள்ளது. அரசு துறைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் தான் திட்டப்பணிகள் விரைவாக முடிவு பெறும். ஒவ்வொரு திட்டமும் பல கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

அரசு நிதி மட்டுமின்றி கடன் வாங்கியும் திட்டங்களுக்காக செலவிடுகிறோம். மக்கள் வரிப்பணம் வீணாகாமல் ஒதுக்கப்படும் நிதியை விட குறைந்த செலவில் திட்டங்களை முடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டுக்கான பணிகளை அந்தந்த ஆண்டிலேயே முடிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டங்களை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

மேலும் சில துறைகளில் 2021 -22ம் ஆண்டு பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் கள ஆய்வில் ஈடுபட வேண்டும். பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் தடுக்க வேண்டும். 

மாவட்ட கலெக்டர்கள் பணிகளை கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடையும். பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. பட்ஜெட்டுக்கு முன்பாகவே தற்போதுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து