முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகிழ்ச்சிகரமான கிராம குளியல்:கிணற்றில் குதித்து குளிக்கும் அமைச்சரின் வீடியோ வைரல்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Ma Subramani 20221 02 02

Source: provided

ஈரோடு: மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிணற்றில் குதித்து குளிக்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சராக இருப்பவர் மா.சுப்பிரமணியன். இவர் நடைப்பயிற்சி, மாரத்தான் ஓட்டம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்களில் தங்கும் போது காலை நேரங்களில் அப்பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு காணொலிகளை பகிர்ந்து உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு பதிவை வெளியிட்டு வருகிறார். 

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், அமைச்சர் கிணற்றின் மேல் இருந்து குதித்து ஆனந்த குளியல் போட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

தினந்தோறும் குளியலறையில் 2 குடம் தண்ணீரில் குளிக்கும் வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு  காலை வேளையில் மகிழ்ச்சிகரமான கிராம குளியல் எனப் பதிவிட்டுள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்துள்ள வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து