முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் 67 லட்சம் பேர்: தமிழக அரசு தகவல்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பகப் பதிவுதாரா்களின் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பக அலுவலகங்களில் டிசம்பா் 31-ம் தேதி வரையிலான காலத்தில் பதிவு செய்துள்ளவா்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.  அதில், அரசுப் பணிக்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 75 ஆயிரத்து 250 ஆகும். 

அவா்களில் ஆண்கள் 36 லட்சத்து 14 ஆயிரத்து 327 பேர். பெண்கள் 31 லட்சத்து 60 ஆயிரத்து 648 பேர். மூன்றாம் பாலினத்தவா் 275. இவா்களில் 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவா்களே அதிகமாக உள்ளனர். இந்த வயதைச் சோ்ந்தவா்கள் 27 லட்சத்து 95 ஆயிரத்து 278 பேர். 

18 வயதுக்குக் குறைவானவா்கள் 19 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேரும், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 994 பேரும், 46 முதல் 60 வயதுக்கு உட்பட்டவா்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 978 பேரும் உள்ளனர். 60 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 675 ஆக உள்ளது.

ஒட்டுமொத்த பதிவுதாரா்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 396 மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர். அவா்களில் ஆண்கள் 95 ஆயிரத்து 247 பேரும், பெண்கள் 48 ஆயிரத்து 149 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து