முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலம்பம் சுற்றிய அமைச்சர்: வியந்து பார்த்த அதிகாரிகள்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      தமிழகம்
Mano-Thangaraj 2023 02 03

Source: provided

நெல்லை : நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து சிலம்பம் விளையாடி அசத்தினார்.

அண்ணாவின் 54-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மையங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.

 இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இந்த போட்டியினை துவக்கி வைப்பதற்காக அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று அண்ணா விளையாட்டு அரங்கம் சென்றார். 

போட்டிகளை துவக்கி வைக்கும் முன்னர் அவர் ஏற்கனவே சிலம்பக் கலையில் அதிகம் ஈடுபாடு  உள்ளவர் என்பதால் மைதானத்தில் சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை அசத்தினார். இதனை அடுத்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை அவர் துவக்கி வைத்தார். அவர் சிலம்பம் சுற்றுவதை பார்த்த பள்ளி மாணவ, மாணவர்களிடையே உற்சாகத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து