முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 18-ம் தேதி கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      இந்தியா
Nirmala-1 2023 02 01

Source: provided

புதுடெல்லி : ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி. பற்றி விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தது. போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் வரும் 18-ம் தேதி கூடுகிறது. நடைபெற உள்ள 49-வது ஜி.எஸ்.டி கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

மேலும் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி.யும் விவாதத்திற்கு வரலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் வெளியிட்டிருந்த பதிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து