முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர், நீடாமங்கலம் பகுதியில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2023      தமிழகம்
Tiruvarur-Central-team 2023

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

பருவம் தவறி பெய்த மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்து போனது.அறுவடை செய்யப்பட்ட நெல்லும் மழையில் நனைந்து போனது இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் ஈரப்பதம் அதிகரித்தது. 

விவசாயிகள் அறுவடை செய்த நெல்  தமிழக அரசின் நேரடி நெல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதமாக இருக்க வேண்டும் என நிபந்தனை உள்ளது. டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. 

இந்த நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதம் உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு  கோரிக்கை விடுத்து வந்தனர். இத்தகைய சூழலில் தமிழக முதல்வர்  விவசாயிகளின்  கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

இதனையடுத்து மத்திய குழுவினர்  இரண்டாவது நாளாக திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே  ரிஷியூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், யோகேஷ் அடங்கிய குழுவினர், மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ, ஆகியோர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம்  குறைகளை கேட்டறிந்தனர். 

இந்த குழுவினர் நெல் மற்றும் பயிர் சேதங்களை ஆய்வு செய்து அதன் மாதிரிகளை தமிழக உணவு கழக பரிசோதனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசுக்கு அறிக்கையை  அளிக்க உள்ளனர். தொடர்ந்து மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டம் ரிஷியூரை தொடர்ந்து அரிச்சபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து